500 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் | 24 Viral News

500 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்

ரஷ்யாவில் ஏறக்குறைய 500 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது மேலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 500 பேர் மருத்துவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அரசு முறையாக கையாளவில்லை என குற்றச்சாட்டுகள் நீடிக்கும் நிலையில் இத்தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே ரஷ்யாவில் நிலைமை படிப்படியாக கட்டுக்குள் வருகிறது எனவும் விரைவில் ரஷ்ய கொரோனாவில் இருந்து மீண்டு விடும் எனவும் பிரதமர் மிசுஸ்டின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *