52 banned chinese apps in india, list of chinese apps | 24 Viral News

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க பரிந்துரை

இந்தியா-சீனா மோதல்: லடாக் சண்டையில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மோதல்களின் எதிரொலியாக அணைத்து இந்தியர்களையும் சீனாவின் தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

சர்ச்சைக்குரிய இமயமலை எல்லைப் பகுதியில் சீனப் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் எதிரொலியாக சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் நில்லாமல் சீனப் பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் எனவும், சீன செயலிகளை அறவே பயன்படுத்தக்கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் ஒரு பக்கம் இருக்கையில் 52 சீன செயலிகளை நீக்க வேண்டும், அல்லது புறக்கணிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது அந்த தாக்குதலின் பாதிப்பு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இந்த செயலிகளை உபயோக படுத்தும் பொது நமது தகவல்கள் திருடுபோக வாய்ப்புள்ளதாகவும் மேலும் சீன நம்மை உளவு பார்க்க ஏதுவாக இந்த ஆஃப்கள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

எனவே டிக் டாக், யுசி புரோசர், ஹலோ சாட், பப்ஜி கேம், ஷேர் இட், சென்டெர், பியூட்டி ப்ளஸ், கிளின் மாஸ்டர், ஜூம் விடியோ மீட்டிங் உள்ளிட்ட செயலிகளை புறக்கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஜூம் மீட்டிங் செயலி பயன்பாட்டை தவிர்க்குமாறு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எச்சரித்திருந்தது குறிப்பிட தக்கது. இந்த செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்புத் தன்மைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், பயன்பாட்டாளர்கள் இதனை நீக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்றது என்ற வகையில் ஜூம் செயலியை தைவான், ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட செயலிகளைக்கொண்டு சீன இந்தியர்களை வேவு பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *