Aviyal Recipe in Tamil, Kerala Avial Receipe in Tamil, Sidedish to chappathi

கேரளா ஸ்டைல் அவியல்

Aviyal Recipe in Tamil – கேரளா ஸ்டைல் அவியல்

Aviyal recipe in Tamil page gives you the exact details to prepare Kerala style avial recipe.

Kerala Aviyal Recipe in Tamil – தேவையான பொருட்கள்:

  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
  • தயிர் – கால் கப்
  • கத்திரிக்காய் – 2 நறுக்கியது ( பெரிதாக நறுக்கவும் )
  • கேரட் – 2 நறுக்கியது ( பெரிதாக நறுக்கவும் )
  • பீன்ஸ் – 10 நறுக்கியது ( பெரிதாக நறுக்கவும் )
  • உருளைக்கிழங்கு – 2 நறுக்கியது ( தோலை நீக்கி விட வேண்டும் ) ( பெரிதாக நறுக்கவும் )
  • முருங்கைக்காய் – சிறிதாக 2 நறுக்கியது ( பெரிதாக நறுக்கவும் )
  • அவரைக்காய் – 10 நறுக்கியது ( பெரிதாக நறுக்கவும் )
  • சேனைக்கிழங்கு – கால் கப் ( பெரிதாக நறுக்கவும் )
  • தேங்காய் – 1 கப்

Aviyal Recipe in Tamil – செய்முறை

Kerala Aviyal Recipe: 1 –  காய் வேகவைக்கும் முறை

ஒரு குக்கரில் நறுக்கிய பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், சேனைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை நன்கு கொதிக்கவைத்து கேஸை அனைத்து விட்டு இறக்கி விடவும்.

Kerala Aviyal Recipe: 2 – மசாலா தயாரிக்கும் முறை

காய்கறிகளை வேகவைத்து எடுத்த பிறகு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய், 3 பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து 70% அரைபடும் அளவிற்கு அரைத்து கொள்ளவும்.

Kerala Aviyal Recipe: 3 – மசாலா சேர்த்து வேகவைக்கும் முறை

இப்போது நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை குக்கரில் வேகவைத்த காய்கறிகளுடன் ஒரு கப் தயிர் சேர்த்து பொறுமையாக நன்கு கிளறவும். எல்லாவற்றையும் நன்கு கிளறிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நாம் முதலில் காய்களை வேக வைக்கும்போது உப்பு சேர்த்ததால் இப்பொழுது அதற்க்கேற்ற அளவு மட்டும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் மசாலா கலந்த காய்கறிகளை 5 நிமிடம் அல்லது மசாலா வேகும்வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

Kerala Aviyal Recipe: 4 – தாளிக்கும் முறை

இதனை தாளிக்க ஒரு கடாய் பாத்திரத்தில் ( pan ) 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் அதில் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு மற்றும் தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து இதனை நாம் தயாராக வைத்துள்ள குக்கரில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்பொழுது நாம் ஆவலுடன் சமைத்த சுவையான கேரளா அவியல் தயார்.

To read this article in English, please click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *