தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு | 24 Viral News

தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவில், புதிய உச்சமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 509 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதேநேரம், சுமார் 40 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு, தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் 151 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் திரும்பியவர்கள் அடங்குவர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 8 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில், 45 பேர் பலி ஆனதால், கொரோனா உயிரிழப்பு 911 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஒரே நாளில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, மொத்தம் 10 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு இதுவரை, பரிசோதனை நடத்தி முடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *