சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை - கேரள அரசு | 24 Viral News

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை – கேரள அரசு

கொரோனா ஊரடங்கைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கேரள அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டம் மூலம் 2.87 டிஎம்சி தண்ணீரை 4255 ஹெக்டேர் தரிசு நிலம், தொழில் நிறுவனங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளக் கேரள அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது கேரள அரசு. இந்தத் திட்டம் மூலம் கோவை மண்டலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது.கோவை மண்டலத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானி நதியின் கிளை நதியான சிறுவாணி. கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாகப் பாய்ந்து தமிழகத்தின் கூடுதுறை எனுமிடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது. சிறுவாணி ஆற்றுக்குக் குறுக்கே அட்டப்பாடி வனப் பகுதியில் அணை கட்ட பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது கேரளா அரசு. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு மற்றும் பொது மக்களின் எதிர்ப்பையடுத்து இந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கேரள அரசின் இந்தத் திட்டம் மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் சிறுவாணி ஆற்று நீர் முழுவதையும் கேரளாவே பயன்படுத்திக்கொள்ளும் நிலை ஏற்படும். கோவை மண்டலத்தில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும். கடந்த மாதத்தில், சிறுவாணி அணையில் ‘இன்டேக் டவர்’ அருகே உள்ள குழாயை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *