Karuvalayam poga tips in tamil, karuvalayam neenga, remove dark circle

கண் கருவளையம் நீங்க டிப்ஸ்

Karuvalayam Poga Tips in Tamil – 24viralnews.in

கண் கருவளையம் நீங்க டிப்ஸ்

கண் கருவளையம் என்பது கண்களுக்கு கீழே உள்ள தோல் பகுதி மட்டும் கருத்து காணப்படுவதாகும். பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். சில ஆண்களும் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இந்த கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை பல்வேறு வகையான இயற்கை பொருட்களை வைத்து மிக விரைவாக சரி செய்ய முடியும்.

உருளை கிழங்கு

உருளைக்கிழங்கில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. மேலும் காப்பர், பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்களும் உள்ளன. உருளைக்கிழங்கு நம்முடைய கருவளையத்தை போக்க மிகவும் உபயோகமாக இருக்கும். உருளைக்கிழங்கின் மேல் தோலை எடுத்துவிட்டு அதனை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து 20 நிமிடம் கழித்து தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும்.இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.

தக்காளி சாறு

தக்காளி சாற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து சேர்த்து குடித்து வந்தால், கருவளையங்கள் (dark circles) நாளடைவில் நீங்கிவிடும்.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள வைட்டமின் நம்முடைய முகத்தை பிரகாசிக்கவும் மேலும் முகத்தில் உள்ள கருவளையத்தை நீக்கவும் உதவுகிறது. இதற்கு மஞ்சளை எடுத்துகொண்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்து கண்களின் கீழ் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

பாதாம்

பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் அரைத்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

கற்றாழை

கற்றாழை சருமத்தின் வறட்சியை நீக்கி சருமத்தின் செல்களுக்கு சக்தியை தரும். மேலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். இதனை பயன்படுத்தி கருவளையத்தை நீக்க முடியும்.இதற்கு கற்றாழையை எடுத்து அதனுள் உள்ள ஜெல்லை எடுத்து நம்முடைய கண்களில் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

அன்னாசி

ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் கண்களின் கீழ் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவை தருவதுடன் கருவளையத்தையும் நீக்கும். இதற்கு எலுமிச்சை சாறை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு நம் கண்களுக்கு மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

விளக்கெண்ணெய்

இரவு தூங்கும் முன்பு இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் கருவளையம் நீங்கி விடும்.

வெள்ளரிக்காய்

2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் (dark circles) மறைந்து விடும்.

To read this article in English, please click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *