Personality Development Tips in Tamil, Business & Self Development Tamil

இந்த விஷயத்தில் நீங்க கவனமா இருக்கீங்களா?

Personality Development Tips in Tamil

Personality Development Tips in Tamil : ஒருவருடைய மதிப்பை குறிப்பிடும்போது அவருடைய முழு மரியாதையும் அவருடைய நன்னடத்தையைப் பொறுத்தே அமைகிறது.

அவ்வகையில் ஒருவருடைய மதிப்பை உயர்த்த அவர் கடைபிடிக்கவேண்டிய சில முக்கிய பண்புகளை பின்வருமாறு பார்க்கலாம்

Personality Development Tips 1: Public Speaking

பொது இடங்களில் நாம் பேசும்பொழுது கவனமாக பேசவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. மற்றவர்களிடம் பேசும்போது நம்மைப் பற்றிய எந்த ஒரு ரகசியங்களையோ அல்லது அந்தரங்க விஷயங்களையோ பற்றி பேசாமல் இருப்பது மிகவும் நல்லதாகும்.

அதே போல மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் அதிகம் தலையிடாமல் பேசுவதும் நன்று. அவ்வாறு நாம் அவர்களிடம் பேசும் பொழுது நம்மைப்பற்றிய எண்ணம் அவர்களின் மனதில் மேலோங்கும்.

Public Speaking skill in tamil

நாம் பொது இடங்களில் நின்று பேசும்போது மற்றவர்களை பற்றி குறை கூறுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் நாம் மற்றவர்களை பற்றி குறை கூறும் பொழுது அதை கேட்பவர் மனதில் நம்மை பற்றி ஒரு தவறான அபிப்ராயம் ஏற்படும்.

அந்த அபிப்ராயமே நாளடைவில் நம்மை பற்றிய ஒரு தவறான எண்ணத்தை அவர் மனதில் விதைக்க காரணமாக அமைந்துவிடும்.

அதுமட்டும் அல்லாமல் நாம் யார் ஒருவரை பற்றி குறை கூறுகிறோமோ அவர்களிடமே அவர் இதை பற்றி கூறவும் வாய்ப்பு இருப்பதால் நாம் பொது இடங்களில் மிகவும் கவனமாக பேசவேண்டியது மிகவும் அவசியமான விஷயங்களில் ஒன்று.

Personality Development Tips 2: Body Language

முக மற்றும் உடல் தோரணை வைத்தே ஒருவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியம் பெரும்பாலும் கணிக்கப்படுகிறது. அந்தவகையில் நாம் ஒருவரிடம் பேசும்பொழுதோ அல்லது அலுவலகத்தில் ஏதேனும் தலைப்பை விவரிக்கும்போது அல்லது அலுவலகம் சார்ந்த ஒரு நபருக்காக காத்திருக்கும்பொழுதோ நமது உடல் மற்றும் முக தோரணைகளை சரியாக வைத்துக்கொள்வது மிக மிக முக்கியமான ஒன்று.

body language in tamil

பெரும்பாலும் நாம் இருக்கைகளில் அமரும்பொழுது நமக்கு வசதியாக சாய்ந்து அமர்வது வழக்கம்.

மீட்டிங், கான்பிரன்ஸ், குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முக கலந்தாய்வுகளில் பங்கேற்கும்போளுது அவ்வாறு அமராமல் நிமிர்ந்து கம்பீரமாக அமரவேண்டும்.

அவ்வாறு அமரும்பொழுது மற்றவர் நம்மை தைரியம் மிகுந்தவர் எனவும், நாம் அங்கு நடப்பவை பற்றிய நல்ல புரிதல் உள்ளவர் என்றும் நிதைத்துக்கொள்வர். இது மற்றவர் மத்தியில் நமக்கு ஒரு நன் மதிப்பை பெற்றுத்தரும்.

Personality Development Tips 3: Behavior

ஒருவருடைய நன்னடத்தை ஒருவருக்கு நன்மதிப்பை பெற்றுத்தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம்.

ஒருவரின் அறைக்குள் நுழைவதற்கு முன்பு கதவை தட்டி அனுமதியுடன் உள்ளே சென்றால், மற்றவர்களை ஒப்பிடுகையில் உங்களுடைய நல்லொழுக்கம் உயரும்.

பணியிடத்தில் கை தொலைபேசியை அமைதியான அல்லது அதிர்வுறும் முறையில் வைப்பதால் யாருக்கும் இடையூறாக இருக்காது.

அதோடு வேளையில் முழுமையான கவனத்துடன் குறித்த நேரத்தில் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்வதால் எந்த பதற்றமும் இல்லாமல் உற்சாகத்துடன் வேலையை தொடங்க உதவும்.

சக ஊழியர்களை பற்றி குறை கூறுவது மற்றும் கேலி செய்வதால் நம்முடைய தரம் குறைத்துவிடும்.

யாருடைய மனதையும் புண்படுத்தாமல் பேசுவதால் எல்லார் மனதிலும் உயர்ந்த இடத்தில் இருப்பதோடு மற்றவர்களை ஒப்பிடும்போது உங்களுடைய கேரக்டர் சற்று வித்தியாசம் மற்றும் சிறப்புடையதாக இருக்கும்.

நம்முடன் பணிபுரிபவர்கள் அல்லது நண்பர்களின் தகவல்களை அவருடைய அனுமதியின்றி எடுப்பதோ, பார்ப்பதோ மற்றும் அருகில் இருப்பவர்களுடன் பகிர்வதோ அல்லது அதைப்பற்றி கேலி செய்வதோ நம்மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அடுத்தவர் மத்தியில் ஓர் நன்னடத்தை குறைந்தவர் போல் தோற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே இவற்றை தவிர்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.

Personality Development Tips in Tamil 4: Anger Management

கோபம்: அதை கட்டுக்குள் வைத்திருப்பது தான் நமது சாமர்த்தியம். பெரும்பாலும் ஒரு மனிதனுக்கு கோபம் ஏற்படுவது இயல்பு.

ஆனால் அதை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை பொறுத்தே நமது கேரக்டர் அந்த இடத்தில நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக நமக்கு பிடிக்காத விஷயத்தை ஒருவர் செய்யும்பொழுது அவர் மீது நமக்கு அளவற்ற கோபம் வருகிறது. அவ்வாறு ஏற்படும் கோபத்தை நாம் எவாறு வெளிப்படுத்துகிறோம் அல்லது அதை எவ்வாறு கையாள கற்றுக்கொள்கிறோம் என்பதே நமது சாமர்தியமாகிறது.

Personality Development in Tamil

பொது இடத்தில் நமக்கு கோபம் ஏற்படும் வகையில் எவரேனும் நடந்துகொண்டால் அப்பொழுது அவர்மீது வரும் கோபத்தை பொறுத்துக்கொண்டு அந்த இடத்தில நாம் அமைதியாக நடந்துகொள்ளவேண்டும்.

பொது இடங்களில் நாம் மற்றவர் மீது கோபப்படும்பொழுது நாம் எதற்காக கோபப்படுகிறோம் என்பதை அறியாதவர்கள் நம்மை தவறாக நினைக்கக்கூடும்.

எனவே நமக்கு கோபம் வரும் வேளையில் அதை தவிர்ப்பது மட்டுமே உங்களது மதிப்பை உயர்திக்கொடுக்கும்.

Personality Development Tips 5: Physical Fitness

உடல் அளவில் நாம் வலுவாக இருப்பது மற்றவர்களுக்கு நம்மீது ஒருவித மரியாதையை ஏற்படுத்தும்.

அதுமட்டும் இல்லாமல் நம் உடலை சரியாக பராமரிப்பது நாம் ஆடைகள் அணியும்பொழுது நமக்கு ஒரு அழகான தோற்றத்தை கொடுக்கிறது.

Personality Development in Tamil

ஒருவர் அவரது உடலை சரியாக பராமரிக்கவில்லையென்றால் அவர் அணியும் ஆடைகள் அவருக்கு பொருந்தாதவை போலவே காட்சியளிக்கும். எனவே உடலை பராமரிப்பது பெசோனாலிட்டி டெவெலப்மெண்ட்டில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

Personality Development Tips in Tamil 6: Food habits

முறையான உணவு பழக்கம் உங்கள் உடல் நிலையில் நல்ல மாற்றத்தை உண்டு செய்கிறது. மற்றவர் முன் அமர்ந்து சாப்பிடும் பொழுது நாம் உண்ணும் பாணியில் ஒழுங்கானத்தன்மை இருக்க வேண்டாம்.

அதாவது நாம் குழுவாக அமர்ந்து சாப்பிடும் பொழுது அனைவரும் சாப்பிடும் பொழுதுதான் நாம் சாப்பிட தொடங்க வேண்டும்.

Personality Development in Tamil

நாம் முதலில் சாப்பிட்டு முடித்தாலும் அனைவரனும் சாப்பிடும் வரை காத்திருந்து எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் அந்த இடத்தை விட்டு எழ வேண்டும்.

மேலும் தேவையான இடங்களில் மட்டும் திஷ்சு உபயோகிப்பது மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நல்ல மதிப்பை கொடுக்கும்.

Personality Development Tips in Tamil 7: Friends Making Skills

பார்க்கும் நபர்களையெல்லாம் நண்பர்கள் ஆக்கிக்கொள்ளும் திறமை இருந்தால் நீங்க தான் ராஜா. ஒருவருடன் நன்றாக பழகி அவரை நண்பர் ஆக்கிக்கொள்ளும் திறமையை வளர்த்து கொள்ளுவது மிக முக்கியமான திறமைகளில் ஒன்று.

Personality Development in Tamil

நண்பர்கள்-குழு அமைத்துக்கொள்வது என்பது ஒரு கலை ஆனால் தவரான நண்பர்களால் அந்த குழு நிரப்பப்பட்டால் அதுவே உங்களுக்கு ஒரு நெகடிவ் இம்ப்ரெஸ்ஸன்ஐ உருவாக்கிவிடும். எனவே நம்பர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.

Personality Development Tips 8: Learning Skills

தினம்தோறும் புதிய விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அது மற்றவர்கள் ஒரு விஷயத்தை பற்றி கேக்கும்போளுது அது பற்றி நாம் விவரிக்க ஏதுவாக இருக்கும்.

இதன் மூலம் மற்றவர் முன்னிலையில் உங்கள் மதிப்பு உயரும்.

Personality Development Tips 9: Communication skills

நாம் சொல்ல வருவதை கேட்பவர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக கூறவேண்டும். எப்பொழுதும் சொல்லவருவதை சுத்திவளைத்து சொல்லாமல் நேரடியாக சொல்லுவது உங்கள் மீது ஒரு நல்ல மரியாதையை கொடுக்கும்.

Personality Development Tips 10: Dealing with problem

ஒரு பிரச்சனை வந்தால் அதை கண்ணு அச்சம் கொள்ளாமல் அதை தீர்க்க வழிகள் கண்டுபிடித்து மற்றவர்களை விட நல்ல முறையில் வைக்கவேண்டும்.

Dealing with problem skills

இந்த பதிவை பற்றிய உங்களது கருத்த்தை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யவும். மேலும் இந்த பதிவு யாருக்கு உபயோகமாக இருக்கும்னு நீங்க நெனைக்கிறிங்களோ அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.

வேறு டாபிக் பற்றி நீங்க தெரிஞ்சுக்க விரும்பினால் அதையும் கமெண்ட் பண்ணுங்க அந்த டாபிக் பத்தின தகவலை உங்களுக்காக நாங்கள் பதிவிடுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *