udal yedaiyai kuraippathu in tamil, udal yedaikkana kaaranangal in tamil

உடல் எடையை குறைக்க எளிய வழிகள்

udal yedaiyai kuraipathu yeppadi in tamil- 24viralnews.in

உடல் எடையை குறைக்க எளிய வழிகள்

பல்வேறு காரணங்களால் உடல் எடை கூடுகிறது. நம் முன்னோர் காலங்களில் ஆரோக்கிய உணவுகள் மட்டும் தான் இருந்தது. ஆனால் தற்காலத்தில் உள்ள உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆனால் அதை தான் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்கிறார்கள். இதன் காரணமாக ஏற்படும் பாதிப்பில் ஒன்று தான் உடல் எடை கூடுவது. இது பெரும்பாலும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இந்த பிரச்னையை சந்திக்கிறார்கள் மேலும் பல்வேறு விதமான மருந்து மற்றும் மாத்திரைகள் உண்பதோடு சிகிச்சைகளையும் எடுத்து கொள்கிறார்கள். அப்படி செய்வது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இப்படி எந்த விதமான பக்க விளைவுகள் மற்றும் அதிக செலவுகள் இல்லாமல் இயற்கையாகவே உடல் எடையை குறைக்க முடியும்.

உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்

1. மன அழுத்தம்,
2. மரபியல் காரணிகளான ஜீன்,
3. குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,
4. ஒழுங்கற்ற செரிமானம்,
5. அதிகமாக சாப்பிடுதல்,
6. சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,
7. சுறுசுறுப்பின்மை, உழைப்பின்மை,
8. உடற்பயிற்சி இல்லாமை,
9. உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,
10. சரியான தூக்கமின்மையும்,
11. அதிகளவு கொழுப்பு ,சர்க்கரை(சாதம்) உணவுகளை சாப்பிடுவதாலும்,
12. குறைந்த வளர்சிதை மாற்றம்,
13. நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது,
14. தேவையற்ற நேரங்களில் தேனீர் அருந்துவது,
15. உடலில் தேவையற்ற கழிவுபொருட்கள் அதிகமாக சேர்ந்து இருப்பதும் உடல் எடை கூடுவதற்கான
காரணமாகும்.

உடல் எடையைக் குறைக்க எளிய வழிகள்

1. தண்ணீர்

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் தொப்பையும் குறைந்துவிடும்.

2. தேன்

வயிற்றைச் சுற்றி தொப்பையை வருவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே நாம் உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. இஞ்சி

உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

4. சிட்ரஸ் பழங்கள்

பழங்களில் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை சாறு மற்றும் திராட்சை போன்ற பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

5. பூண்டு

எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

To read this article in English, please click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *