தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா

தமிழகத்தில், இதுவரை இல்லாத வகையில், புதிய உச்சமாக ஒரே நாளில் 2,865 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரே நாளில், அதிகப்பட்சமாக, 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு உச்சம் எட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில், அதிகபட்சமாக 2,865 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 91 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் திரும்பியவர்கள் அடங்குவர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. ஒரே நாளில், 33 பேர் பலியானதால், கொரோனா உயிரிழப்பு 866 ஆக உயர்ந்தது.44 வயது ஆண் மற்றும் 2 பெண்கள் உள்பட 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பெண்கள் உள்பட 25 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 424 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை சுமார் 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஒரே நாளில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள காதாரத்துறை, மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தி முடித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும், தமிழகத்தில் 2- வது முறையாக அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.coona

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *